சுடர்விடும் சூரியனாக இருந்த பிரசாந்த் அண்ணா மறைய வில்லை மீண்டும் உதயமாவர்
எம் உயிர் தோழனே! எம் உயிரினிலும் மேலான பிரசாந்த் அண்ணாவே! எம்மை விட்டு செல்ல துணிந்தது ஏனோ! அழகிய உறவாக நட்பின் சிகரமாக எம் இடையே வாழ்ந்தவனே! நட்பின் இலக்கணமாக அன்பின் உருவமாக வீரத்தின் விழைநிலமாக சிறப்புற்றவனே! எம்மை விட்டு விலகிச் செல்ல எப்படித்தான் மனம் வந்ததோ! கண்களுக்குள் கண்மணியாக இருந்தவன் இன்று _கண்களை கடலாக்கி விட்டு சென்றது ஏனோ! எம் உயிரான பிரசாந்த் அண்ணாவே! நெஞ்சம் பட படக்கின்றதே இதயம் வெடிக்கின்றதே! யார் எமக்கு ஆறுதல் சொல்வர்! எமக்குள் வீரத்தையும் மனத்திடத்தையும் வளர்த்தவன் நீயன்றோ உன் இழப்பு கண்டு துடி துடித்து விட்டோம்! உன் அன்னைக்கு எப்படி கூறுவோம் நீ எம்மை விட்டு விலகி _விண்ணகம் சென்றதை பிரசாந்த் அண்ணாவே! உன் அன்னை உன்னில் வைத்த பாசம் அன்பு நாம் அறிவோம் எப்படிடா கூறுவோம் _நீ இல்லை என்று நம்முடன் அந்த உயிர் தெய்வத்துக்கு என்ன பதில் சொல்லி உன் இழப்பை ஆற்றுவோம் அண்ணா! எம்மைத்தான் பிரிந்து செல்ல முயற்சித்தாய்_உயிரினிலும் மேலான அழகிய உறவான அம்மாவை விட்டு செல்ல எப்படி துணிந்தாய் பிரசாந்த் அண்ணாவே!! இல்லை இல்லை நீ எம்மை விட்டு செல்லவில்லை என்றும் எப்பவும் உயிர்த் தீயாக எமக்குள் சுடர் விட்ட வண்ணம் உங்கள் நினைவுகள் மீட்டிய வண்ணம் எம்முடன் வாழ்வாய்! கருங்கல்லில் பொறிக்கப் பட்ட சிற்பம் போன்று எம் ஒவ்வரு நண்பர்களிடத்தில் மனதில் உயிர் ஓவியமாக செழித்து மென்மேலும் வளருவாய்!எம் உயிர்த் தோழனே பிரசாந்த் அண்ணாவே!!!!!!!
கடல் அலை போன்று உங்கள் நினைவுகள் எம்மை முட்டி மோதுகின்றது என்றும் உங்கள் உயிர் நண்பர்கள்