மனிதனின் மரணம் காலனின் கணிப்பு - நம், புலிவீரர் மரணம் எதிரியின் இலக்கு, விடியலைத்தேடி விரைந்த எம் வீரர், பகைதனை அழிக்க அளித்தனர் உயிரை, தான்வாழ பிறர் அழிக்கும் தன்னல உலகமதில், தன்னினம் வாழ தம்முயிர் தந்திடும் வீரரவர், சிங்களவன் மட்டும் எம் எதிரி என்றால், என்றைக்கோ பெற்றுத் தந்திருப்பீர் தமிழீழம், அரசியல் இலாபந்தேடி அகிம்சாவழி பேசிக்கொண்டு, அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள், அப்போதும் இப்போதும் உலக அரசியல் நகர்வுகளில், அமெரிக்கா அங்கீகரித்தால் ரஷ்யன் எதிர்ப்பானாம், சீனன் துணை போனால் இந்தியன் பகையாம், எம் ஈழத்தின் போரிலே எல்லோரும் ஒற்றுமை, சிங்கள் வெறியனுக்கு சீர்கொடுத்துப்பேணுவதில், எச்சிலிலைகள் மத்தியில் நிற்கின்ற பல நாய்களின் ஒலி, உற்றுக்கேட்டதில் ஒவ்வொரு நாயும் சொல்கிறது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வு, நியாயமான போராட்டங்கள் தோற்றதாய் வரலாறில்லை, தன்னலமற்ற தியாகங்கள் விலைபோனதாக சரித்திரமில்லை, நாமே ஒரு நாள் வெல்வோம், பகையே அப்போ பதில் சொல்வோம்.
glitter-graphics.com